/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
118 தனிமங்களின் பெயர்களை 25 வினாடிகளில் கூறி சாதனை
/
118 தனிமங்களின் பெயர்களை 25 வினாடிகளில் கூறி சாதனை
118 தனிமங்களின் பெயர்களை 25 வினாடிகளில் கூறி சாதனை
118 தனிமங்களின் பெயர்களை 25 வினாடிகளில் கூறி சாதனை
ADDED : பிப் 24, 2024 04:57 AM

காரைக்குடி : அரியக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவி 118 தனிமங்களை 25 வினாடிகளில் கூறி சாதனை படைத்துள்ளார்.
அரியக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 மாணவி அபிநயா 17. இவர் வேதியியலில் உள்ள 118 தனிமங்களை 25 வினாடிகளில் கூறும் திறமை கொண்டவர்.
மாணவியின் இந்த திறமையை வெளிக் கொணரும் நோக்கில் கிங்டம் வேர்ல்ட் ரெக்கார்டு சாதனை நிகழ்ச்சி நேற்று பள்ளியில் நடந்தது.
இதில், மாணவி அபிநயா 118 தனிமங்களை 25 வினாடிகளில் கூறி சாதனை படைத்தார். நிகழ்ச்சியில், ஏ.எஸ்.பி., ஸ்டாலின் மாணவிக்கு சாதனை சான்றிதழை வழங்கினார்.
தலைமை ஆசிரியர் பிரிட்டோ வரவேற்றார். இதில், ஊராட்சி தலைவர் சுப்பையா மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கிங்டம் வேர்ல்டு ரெக்கார்டு நிறுவனர் செல்வராஜ் சாதனை குறித்து பேசினார்.
ஆசிரியர் ஜான் குழந்தை நன்றி கூறினார். ஆசிரியை நிலா நந்தினி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

