/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மறவமங்கலத்திற்கு தனி போலீஸ் ஸ்டேஷன்
/
மறவமங்கலத்திற்கு தனி போலீஸ் ஸ்டேஷன்
ADDED : ஜன 19, 2024 04:59 AM
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது மறவமங்கலம் ஊராட்சி. இந்த பகுதியில் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு தனி போலீஸ் ஸ்டேஷன் கிடையாது.
இவர்கள் அனைவரும் ஏதாவது பிரச்னை என்றால் புகார் கொடுக்க காளையார்கோவில் போலீஸ் ஸ்டேஷனுக்கு தான் வரவேண்டும்.
காளையார் கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் 45 பஞ்சாயத்தில் 375 கிராமங்கள் உள்ளது. காளையார் கோவிலில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் கட்டுபாட்டில் 271 கிராமங்கள் உள்ளது.
காளையார்கோவில் இருந்து மறவமங்கலம், உசிலங்குளம், குண்டாக்குடை, சேதம்பாள், சிலுக்கப்பட்டி, சேத்துார் உள்ளிட்ட அனைத்து பகுதி மக்கள் புகார் கொடுக்க காளையார்கோவில் போலீஸ் ஸ்டேஷனுக்கு தான் வர வேண்டும்.
இது தவிர இரவு நேரங்களில் இந்த கிராமத்திற்கு போலீசார் செல்வதில் சிரமம் உள்ளது. மறவமங்கலம் பகுதியில் போலீஸ் ஸ்டேஷன் அமைக்கவேண்டும் என மறவமங்கலத்தை சுற்றியுள்ள கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

