
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார் : திருப்புத்துார் அருகே கும்மங்குடி விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லுாரியில் தொழுநோய் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
சிவகங்கை மாவட்ட தொழுநோய் அலுவலகத்தினர் மற்றும் கல்லல் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து தேசிய தொழு நோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு முகாம் நடத்தினர். கல்லூரி முதலாமாண்டு மாணவர்களுக்கு தொழுநோய் குறித்தும், அதற்கான சிகிச்சை,மறுவாழ்வு குறித்தும் பேசினர்.
மாவட்ட நலக்கல்வியாளர் சுப்பாரெட்டி, மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் சந்தானகிருஷ்ணன் நோய் பரவும் விதம், காரணம் குறித்து விளக்கினர். கிராம சுகாதார செவிலியர் விஜயா, இடைநிலை சுகாதார செவிலியர் ரூபா ஷாலினி, முதல்வர் சசிகுமார் மற்றம் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

