/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கடை விற்பனையாளர்களிடம் கரும்புக்கான லாரி வாடகை வசூல் பாம்கோ விற்பனையாளர்கள் புகார்
/
கடை விற்பனையாளர்களிடம் கரும்புக்கான லாரி வாடகை வசூல் பாம்கோ விற்பனையாளர்கள் புகார்
கடை விற்பனையாளர்களிடம் கரும்புக்கான லாரி வாடகை வசூல் பாம்கோ விற்பனையாளர்கள் புகார்
கடை விற்பனையாளர்களிடம் கரும்புக்கான லாரி வாடகை வசூல் பாம்கோ விற்பனையாளர்கள் புகார்
ADDED : ஜன 14, 2024 04:44 AM
சிவகங்கை, : சிவகங்கையில் மொத்த விற்பனை பண்டக சாலையின் கட்டுப்பாட்டிலுள்ள ரேஷன் கடைகளில் கரும்பு இறக்கு, ஏற்று கூலி, லாரி வாடகையை விற்பனையாளர்களிடம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.
மாவட்டத்தில் கூட்டுறவு, மொத்த விற்பனை பண்டக சாலை, நுகர்பொருள் வாணிப கழக நிர்வாகத்தின் கீழ் 829 ரேஷன் கடைகள் செயல்படுகின்றன.
இந்த கடைகளில் அரிசி வாங்கும் 4.16 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, ரூ.1,000, வேட்டி, சேலை வழங்க வேண்டும்.
அரசு ஒரு கரும்புக்கு ரூ.33 வீதம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் இருந்து தான் லாரி வாடகை, ஏற்று, இறக்கு கூலியை அதிகாரிகள் வழங்க வேண்டும்.
எக்காரணத்தை கொண்டும் ரேஷன் கடை விற்பனையாளர்களிடம் வசூலிக்கக்கூடாது என்ற நோக்கத்தில் தான் அரசு முழு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
ஆனால், சிவகங்கை மாவட்டத்தில் மொத்த விற்பனை பண்டகசாலையின் (பாம்கோ) கீழ் செயல்படும் 125 ரேஷன் கடைகளில் இறக்கப்படும் கரும்புகளுக்கான ஏற்று, இறக்கு கூலி, லாரி வாடகை என ஒவ்வொரு விற்பனையாளரிடமும் ரூ.3,000 முதல் 4,000 வரை வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.
ஏற்கனவே வேட்டி, சேலை தட்டுப்பாட்டால், ரேஷன் கார்டுதாரர்களை சமாளிக்க முடியாமல் தவிக்கும், விற்பனையாளர்களிடம் கரும்புக்கான ஏற்று, இறக்கு கூலி, லாரி வாடகையை சுமத்துவது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கூட்டுறவு துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்திலேயே இது போன்று அதிகாரிகள் வசூலில் ஈடுபடுவதாக விற்பனையாளர்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.

