/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
புத்தக கண்காட்சி : பேனர் கட்டும் மாணவர்கள்
/
புத்தக கண்காட்சி : பேனர் கட்டும் மாணவர்கள்
ADDED : ஜன 24, 2024 04:58 AM
சிவகங்கை, : சிவகங்கை மன்னர் மேல்நிலை பள்ளி வளாகத்தில், ஜன., 27 முதல் பிப்., 6 வரை மாவட்ட நிர்வாகம் சார்பில் புத்தக கண்காட்சி மற்றும் திருவிழா நடைபெற உள்ளது. 120 ஸ்டால்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் கண்காட்சியில் இடம் பெற உள்ளது. கண்காட்சியை முன்னிட்டு தினமும் மாலையில் பள்ளி, கல்லுாரி மாணவர்களின் கலைநிகழ்ச்சி, பட்டிமன்றம், தமிழ் ஆர்வலர்களின் சொற்பொழிவு நடைபெற உள்ளது. கண்காட்சி நுழைவு வாயிலில் தோரணங்கள் கட்டும் பணி கண்காட்சி தொடர்பாக விளம்பர பேனர்களை வைத்து வருகின்றனர். நேற்று பேனர் வைக்கும் பணியில் மாணவர்களை பயன்படுத்தினர். இது மாணவர்களின் பெற்றோரிடத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கலெக்டர் ஆஷா அஜித் இந்த விஷயத்தில் தனி கவனம் செலுத்தி, புத்தக கண்காட்சி அரங்கு அமைத்தல், பேனர் கட்டுதல் போன்ற பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தாமல் கண்காணிக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் வலியுறுத்தி வருகின்றனர்.

