ADDED : ஜூன் 25, 2025 03:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புவனம் : திருப்புவனத்தில் ஆய்வாளர் காளைராசன் மார்கண்டேய தீர்த்த தெப்பக்குளம் குறித்து ஆய்வு மேற்கொண்டு அதன் சிறப்பு குறித்து நுால் எழுதியுள்ளார். வெளியீட்டு விழா த.மா.கா., தொண்டரணி தலைவர் அயோத்தி தலைமையில் நடந்தது. தொழிலதிபர் கண்ணன் வெளியிட முத்துக்குமாரசாமி மற்றும் தொழிலதிபர் முத்துச்செல்வன் பெற்று கொண்டனர்.
கவுன்சிலர் பாரத்ராஜா, முன்னாள் கவுன்சிலர் நாகராஜன், மோடி பிரபாகரன், விவசாய சங்க பிரமுகர் ஆதிமூலம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.வக்கீல் ராஜா நன்றி தெரிவித்தார்.