ADDED : ஜன 14, 2024 11:19 PM

மானாமதுரை : மானாமதுரை அண்ணாத்துரை சிலை அருகே உள்ள ரயில்வே கேட் அருகே குவித்து வைக்கப்பட்டுள்ள நடுகற்கள், மின் கம்பங்களினால் விபத்து அபாயம் உள்ளதாக வாகன ஓட்டிகள் தெரிவித்து வருகின்றனர்.
மானாமதுரை அண்ணாத்துரை சிலை அருகே உள்ள ரயில்வே கேட் பகுதியில் ரயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமான நடு கற்கள் மற்றும் மின்கம்பங்களை ரோட்டின் ஓரமாக குவித்து வைத்துள்ளனர். நீண்ட நாட்களாக இவ்வாறு குவித்து வைக்கப்பட்டுள்ள பொருட்களினால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கி காயமடைந்து வருகின்றனர்.
இது குறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், ரயில்வே கேட் அருகே குவித்து வைக்கப்பட்டுள்ள நடுகற்கள் மற்றும் மின் கம்பங்களினால் டூ வீலர் மற்றும் சைக்கிள்களில் வருபவர்கள் நடந்து வருபவர்கள் ரோட்டின் ஓரமாக இப்பொருள்கள் கிடப்பதினால் தடுமாறி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர்.இது குறித்து ரயில்வே நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் அப்பொருட்களை அகற்றாமல் உள்ளதினால் தினந்தோறும் சிலர் காயமடைந்து வருகின்றனர்.
ஆகவே ரயில்வே நிர்வாகத்தினர் ரயில்வே கேட் அருகே ரோட்டின் ஓரமாக போடப்பட்டுள்ள நடுகற்கள் மற்றும் மின் கம்பங்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

