/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நேரடி கரும்பு விற்பனையில் விவசாயிகள்
/
நேரடி கரும்பு விற்பனையில் விவசாயிகள்
ADDED : ஜன 14, 2024 11:37 PM

சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் விவசாயிகளே நேரடி கரும்பு விற்பனையில் ஈடுபட்டதால் கணிசமான விலைக்கு கரும்புகள் கிடைத்தது.
இப்பேரூராட்சியில் பொங்கல் விற்பனைக்காக மதுரை மாவட்ட பகுதியில் இருந்து அறுவடை செய்யப்பட்ட கரும்புகள் விவசாயிகள் மூலம் நேரடியாக விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
7 அடி உயரம் வரை வளர்ந்துள்ள 10 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ.350 முதல் 500 ரூபாய் வரை விற்கப்படுகிறது. ரோஹித், ஒத்தபட்டி, கரும்பு விவசாயி: 40 சென்டில் கரும்பு பயிரிட்டு வளர்த்து வந்தேன். அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் 6000 கரும்புகள் வரை வளர்ந்துள்ளது.
வியாபாரிகள் அடிமாட்டு விலைக்கு வாங்கி சந்தையில் கூடுதல் விலைக்கு விற்கிறார்கள். அதனால் விவசாயிகளான நாங்களே கரும்புகளை அறுவடை செய்து நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்கிறோம்.
இதன் மூலம் எங்களுக்கும் கூடுதல் லாபம் கிடைக்கிறது பொது மக்களுக்கும் குறைவான விலையில் கரும்புகள் கிடைக்கிறது, என்றார்.

