/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காவிரி குடிநீர் குழாய் உடைந்து போக்குவரத்து பாதிப்பு
/
காவிரி குடிநீர் குழாய் உடைந்து போக்குவரத்து பாதிப்பு
காவிரி குடிநீர் குழாய் உடைந்து போக்குவரத்து பாதிப்பு
காவிரி குடிநீர் குழாய் உடைந்து போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஜன 14, 2024 05:02 AM

திருப்புத்துார், : திருப்புத்துாரில் காவிரி கூட்டு குடிநீர் குழாய் உடைந்து 50 அடி உயரத்திற்கு நீரூற்று போல பீய்ச்சி அடித்ததால் தென்மாப்பட்டு கண்டரமாணிக்கம் ரோட்டில் போக்குவரத்து பாதித்தது.
திருச்சி மாவட்டத்திலிருந்து ராமநாதபுரம் மாவட்டம் செல்லும் காவிரிக்கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் திருப்புத்துார் வழியாக செல்கின்றன.
அதில் பல இடங்களில் நீர் அழுத்தம் தாங்காமல் குழாய் விரிசலடைவதும், சில நேரம் குழாய் உடைப்பு ஏற்படுவதும் வழக்கம்.
நேற்று காலை தென்மாப்பட்டு பகுதியில் பாலத்தின் மேல் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் அதிக உயரத்திற்கு பீய்ச்சி அடித்தது. கண்டரமாணிக்கம் ரோட்டில் வாகனத்தில் செல்ல முடியாமல் பொதுமக்கள் தவித்தனர்.
பேரூராட்சி துாய்மை ஆய்வாளர் மணிகண்டன் குழாய் வெடிப்பை பார்வையிட்டு, திருச்சி தலைமை நீரேற்று நிலையத்திற்கு தகவல் அளித்தார்.
குழாய்களில் குடிநீர் சப்ளை நிறுத்தப்பட்டது. மேலும் பொங்கல் விழாவை முன்னிட்டு குடிநீர் விநியோகத்திற்கு வசதியாக விரைவாக குழாய் வெடிப்பை சீராக்கவும் கோரினர்.

