/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
குழந்தை தொழிலாளர் : 3 கடைக்கு அபராதம் 3 கடைக்கு அபராதம்
/
குழந்தை தொழிலாளர் : 3 கடைக்கு அபராதம் 3 கடைக்கு அபராதம்
குழந்தை தொழிலாளர் : 3 கடைக்கு அபராதம் 3 கடைக்கு அபராதம்
குழந்தை தொழிலாளர் : 3 கடைக்கு அபராதம் 3 கடைக்கு அபராதம்
ADDED : ஜன 24, 2024 05:06 AM
சிவகங்கை, : சிங்கம்புணரியில் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை கடையில் பணி அமர்த்திய 3 கடைகளுக்கு குற்றவியல் நீதிமன்றம் தலா ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.
சிங்கம்புணரியில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு குழுவினர் கள ஆய்வு செய்தனர். 2021 முதல் 2022 வரை 3 கடைகளில் சிறுவர்களை பணி செய்ய வைத்ததை கண்டறிந்தனர். கடை உரிமையாளர்களுக்கு சிங்கம்புணரி குற்றவியல் நீதிமன்றம் தலா ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தது. அபராத தொகையை குழந்தை, வளரிளம் பருவ தொழிலாளர் மறுவாழ்வு நலச்சங்க வங்கி கணக்கில் வரவு வைத்தனர்.
அரசு பங்கு தொகை தலா ரூ.15,000 வந்ததும், அத்துடன் ரூ.20,000 அபராத தொகையை சேர்த்து சிறுவர்கள் வங்கி கணக்கிற்கு மாற்றப்படும். எனவே வயது 14 முதல் 18 க்கு உட்பட்ட சிறுவர்களை செங்கல் சூளை, கல்குவாரி, பட்டாசு தொழில் போன்று எந்த தொழில்களிலும் ஈடுபடுத்தக்கூடாது. மீறி பணி அமர்த்தினால் ரூ.50 ஆயிரம் அபராதம், 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தை தொழிலாளர் பற்றி தகவல் தெரிந்தால் https://pencil.gov.in என்ற இணைதளத்திலோ, 1098 தொலைபேசி எண்ணில் புகார் செய்யலாம்.

