/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நான்கு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணி அறிவிப்பு இல்லாமல் வீடுகள் இடிப்பதாக புகார்
/
நான்கு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணி அறிவிப்பு இல்லாமல் வீடுகள் இடிப்பதாக புகார்
நான்கு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணி அறிவிப்பு இல்லாமல் வீடுகள் இடிப்பதாக புகார்
நான்கு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணி அறிவிப்பு இல்லாமல் வீடுகள் இடிப்பதாக புகார்
ADDED : ஜன 26, 2024 05:24 AM

சிவகங்கை; சிவகங்கையில் அமைக்கப்பட உள்ள நான்கு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு முன் அறிவிப்பு இல்லாமல் வீடுகள் இடிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
சிவகங்கை சஞ்சய் நகரில் இருந்து மலம்பட்டி வரை ரூபாய் 78 கோடி செலவில் 11 கி.மீ., துாரத்திற்கு சாலை மேம்பாடு திட்டத்தின் கீழ் நான்கு வழி சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதற்கான பூமி பூஜையை கடந்த மாதம் கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் துவக்கி வைத்தார். நான்கு வழிச்சாலைக்கு மேலுார் ரோடு சஞ்சய் நகர் பகுதியில் இடம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
சஞ்சய் நகரில் சுரேஷ்குமார் என்பவரது வீட்டிற்கு எந்த அறிவிப்பும் கொடுக்காமல் வீட்டில் ஆள் இல்லாத போது வீட்டின் முகப்பு பகுதியில் உள்ள காம்பவுண்ட் சுவரை இடித்தும் முகப்பு பகுதியில் உள்ள குடிநீர் குழாயை சேதப்படுத்தி உள்ளனர்.
சுரேஷ்குமார் கூறுகையில், காவல்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அரசு ஊழியர்.
எனது வீடு எனக்கு சொந்தமான பட்டா இடத்தில் உள்ளது. நான்கு வழிச்சாலைக்கு நிலத்தை எடுக்கும் அதிகாரிகள் இதுவரை முறைப்படி எனக்கு தகவல் கூறவில்லை.
எந்த கடிதமும் வரவில்லை. நான் வீட்டில் இல்லாத நேரம் இயந்திரங்களை கொண்டு வீட்டின் முகப்பு பகுதி காம்பவுண்ட் சுவரை இடித்துள்ளனர். தகவல் தெரிவிக்காமல் வீட்டை சேதப்படுத்தியவர் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
உதவி கோட்ட பொறியாளர் சையது இப்ராஹிம் கூறுகையில், நான்கு வழிச்சாலை நிலம் கையகப்படுத்த அனைவருக்கும் முறைப்படி அறிவிப்பு கொடுத்துள்ளோம். ஒரு மாதத்திற்கு முன்பே கலெக்டர் அலுவகத்தில் இருந்து அறிவிப்பு கொடுத்து முறையாக நிலங்களை அளந்து குறியிட்டுள்ளோம். என்றார்.

