/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனத்தில் தொடர் நெரிசல்; மல்லு கட்டும் வாகன ஓட்டிகள்
/
திருப்புவனத்தில் தொடர் நெரிசல்; மல்லு கட்டும் வாகன ஓட்டிகள்
திருப்புவனத்தில் தொடர் நெரிசல்; மல்லு கட்டும் வாகன ஓட்டிகள்
திருப்புவனத்தில் தொடர் நெரிசல்; மல்லு கட்டும் வாகன ஓட்டிகள்
ADDED : பிப் 02, 2024 05:56 AM

திருப்புவனம் : திருப்புவனத்தில் தினசரி ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் மல்லுகட்டி வருகின்றனர். திருப்புவனத்தைச் சுற்றிலும் உள்ள கிராமங்களுக்கு மதுரை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து திருப்புவனம் வழியாக அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் திருப்புவனம் வழியாக இயக்கப்படும் நிலையில் அதற்கேற்ற எந்த வித வசதியும் ஏற்படுத்தப்படவில்லை. சாலையின் இருபுறமும் ரோட்டை ஆக்கிரமித்து கடைகள் அமைத்துள்ளனர். இதனால் எதிர் எதிரே வாகனங்கள் வந்தால் விலக கூட முடிவதில்லை. நரிக்குடி ரோட்டின் இருபுறமும் டூவீலர்களை நிறுத்துவதால் விலக கூட முடிவதில்லை.
நரிக்குடி பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையில் குறுகிய வளைவில் திரும்ப வேண்டியுள்ளது.
எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை. பாதி துாரம் வந்த பின் வாகனத்தை பின்நோக்கியும் எடுக்க முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இரு வாகனங்கள் சிக்கி கொண்டால் யார் முதலில் பின் நோக்கி எடுப்பது என வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று முன்தினம் மதியம் அரசு பஸ் டிரைவருக்கும் மற்றும் ஆட்டோ, லாரி ஓட்டுனருக்கும் இடையே யார் வாகனத்தை பின்னோக்கி எடுப்பது என நீண்ட நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
எனவே மாவட்ட காவல்துறை திருப்புவனத்தில் நரிக்குடி ரோட்டில் ஆக்ரமிப்புகளை அகற்றி வாகனங்கள் எளிதில் சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

