/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஆபத்து! ரேஷன் கடை முற்றிலும் சேதம்: அரிசியை பதம் பார்க்கும் குரங்குகள்

ADDED : பிப் 01, 2024 11:19 PM

சாக்கோட்டை ஒன்றியம் வடகுடி ஊராட்சிக்கு உட்பட்ட மணச்சையில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.இங்கே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இதில்,25க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில் நுழைவு வாயிலில், பயன்பாடில்லாத சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் ரேஷன் கடை கட்டடம் உள்ளது. கட்டடம் முற்றிலும் சேதம் அடைந்துள்ள நிலையில்,பள்ளி சிறுவர்கள் கட்டடத்தின் அருகே சென்று விளையாட வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் விபத்தில் சிக்கும் அபாயமும் நிலவுகிறது.சேதமடைந்த ரேஷன் கடை கட்டடம் சரி செய்யப்படவில்லை. புதிய ரேஷன் கடை கட்டடமும் கட்டப்படவில்லை. தற்போது, அருகிலுள்ள மகளிர் சுய உதவி குழு கட்டடத்தில் ரேஷன் கடை தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. இக்கட்டடத்தின் பின்புறத்தில் உள்ள துளை வழியாக, குரங்குகள் கூட்டம் கூட்டமாக சென்று ரேஷன் அரிசியை பதம் பார்த்து வருகிறது.
எனவே பள்ளி வளாகத்தின் அருகில், இடிந்த நிலையில் உள்ள ரேஷன் கடை கட்டடத்தை அகற்றுவதற்கோ, மராமத்து செய்வதற்கோ உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.