/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மின் ஊழியர் உயிரிழப்பு: 2 பேர் சஸ்பெண்ட்
/
மின் ஊழியர் உயிரிழப்பு: 2 பேர் சஸ்பெண்ட்
ADDED : ஜன 24, 2024 05:05 AM
திருப்புவனம், : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் பழுது பார்க்கும் பணியின் போது ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவத்தில் 2 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
திருப்புவனம் கிழக்கு மின்வாரிய கேங்மேன் மாரிப்பாண்டி 27, நேற்று முன்தினம் டிரான்ஸ்பார்மரில் மின் இணைப்பை துண்டித்து பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்ட போது மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தார். இதில் கவனக் குறைவாக செயல்பட்டதாக கூறி போர்மேன்கள் ராஜ்குமார், சேகரை அதிகாரிகள் தற்காலிக பணி நீக்கம் செய்தனர்.
மின் ஊழியர்கள் கூறியதாவது: துணை மின் நிலையத்தில் இருந்து நேரடி இணைப்பை உதவி பொறியாளர்கள் அனுமதி இன்றி செய்ய முடியாது.
கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை இணைத்து மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. காற்று வீசும் காலங்களில் ஒரு பக்கம் மின்சாரம் துண்டிக்கப்பட்டாலும் மறு பாதை வழியாக மின்சாரம் செல்லுமாறு மின் இணைப்பு வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. டிரான்ஸ்பார்மரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டும் மின்சாரம் வந்தது எப்படி என அதிகாரிகள் விசாரணை நடத்தவே இல்லை. பெயரளவிற்கு போர்மேன்கள் இருவரை மட்டும் தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளனர். நேரடி இணைப்பு கொடுக்க வலியுறுத்திய உதவி பொறியாளர்கள், உதவி கோட்ட பொறியாளர் மீது எந்த வித நடவடிக்கையும் இல்லை என்றனர்.

