/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காதலை தட்டிக் கேட்ட டிரைவர் வெட்டி கொலை: கொத்தனார் கைது
/
காதலை தட்டிக் கேட்ட டிரைவர் வெட்டி கொலை: கொத்தனார் கைது
காதலை தட்டிக் கேட்ட டிரைவர் வெட்டி கொலை: கொத்தனார் கைது
காதலை தட்டிக் கேட்ட டிரைவர் வெட்டி கொலை: கொத்தனார் கைது
ADDED : மே 25, 2025 02:47 AM

தேவகோட்டை:சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா திருவேகம்புத்துார் அருகே உள்ள சீனமங்கலத்தைச் சேர்ந்தவர் அர்ஜூனன் 24. கட்டட தொழிலாளி. இவருக்கும் ஒரு பெண்ணுக்கு பழக்கம் இருந்துள்ளது. இதை அதே ஊரைச் வாடகை கார் நடத்தி வரும் டிரைவர் வள்ளியப்பன் 43, பார்த்துள்ளார். இதனை ஊரில் பலரிடம் தெரிவித்துள்ளார். இதனால் கோபமுற்ற அர்ஜூனன், வள்ளியப்பன் அதே ஊரில் ஒரு பெண் நடத்தி வரும் கடைக்கு அடிக்கடி சென்று வருவதாகவும், தொடர்பு குறித்தும் கூறியுள்ளார். இது குறித்து ஒரு வாரத்திற்கு முன் அர்ஜூனன் மீது போலீசில் வள்ளியப்பன் புகார் செய்துள்ளார்.
இதனால் அர்ஜூனன் கோபமடைந்தார் .
நேற்று முன்தினம் இரவு புலியடிதம்மம் ரோட்டில் அந்த பெண்ணின் கடை அருகே சென்ற வள்ளியப்பனை மறித்து அர்ஜுனன் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார். அர்ஜூனனை திருவேகம்புத்துார் போலீசார் கைது செய்தனர்.