/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நெட்ஒர்க் பிரச்னையால் ரேஷன் கடையில் பொங்கல் தொகுப்பு வழங்குவதில் சிக்கல்
/
நெட்ஒர்க் பிரச்னையால் ரேஷன் கடையில் பொங்கல் தொகுப்பு வழங்குவதில் சிக்கல்
நெட்ஒர்க் பிரச்னையால் ரேஷன் கடையில் பொங்கல் தொகுப்பு வழங்குவதில் சிக்கல்
நெட்ஒர்க் பிரச்னையால் ரேஷன் கடையில் பொங்கல் தொகுப்பு வழங்குவதில் சிக்கல்
ADDED : ஜன 14, 2024 06:10 AM

சிவகங்கை : சிவகங்கை அருகே கீழச்சாலுார் கிராமத்தில் நெட்ஒர்க் பிரச்னையால் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
தமிழக அரசு தைப்பொங்கலை யொட்டி ஒரு கிலோ பச்சரிசி,சர்க்கரை, கரும்பு, 1000 ரூபாய் ரொக்கம் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரருக்கும் வழங்க உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை அருகே உள்ள கீழச்சாலுார் கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு பெற நேற்று மக்கள் வந்தனர். பெருமாள்பட்டி. சிறுவாணிப்பட்டி, இந்திரா நகர், உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 434 குடும்பங்களுக்கு இந்த கடை மூலம் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது.
நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடும் வேளையில் நேற்று பொங்கல் தொகுப்பை வாங்க ரேஷன் கடைக்கு மக்கள் வந்த நிலையில் ரேஷன் கடையில் நெட்ஒர்க் வேலை செய்யவில்லை. ரேஷன் கார்டை பதிய முடியாமல் ஊழியர் சிரமப்பட்டுள்ளார். கிராம மக்கள் 3 மணி நேரத்திற்கும் மேலாக கிராமத்தில் காத்துக் கிடந்தனர்.
கிராம மக்கள் கூறுகையில், பொங்கல் தொகுப்பு வாங்க காலையில் 10:00 மணிக்கே வந்துவிட்டோம். 3 மணி நேரமாக காத்திருக்கிறோம்.
நெட்ஒர்க் வேலை செய்யவில்லை என்று ரேஷன் கடை ஊழியர் கூறுகிறார். பத்து நிமிடத்தில் பொருட்களை வாங்கி விட்டு வேலைக்கு சென்றுவிடலாம் என்று நினைத்து வந்தோம் ஆனால் இங்கு 3 மணி நேரத்திற்கும் மேல் ஆகிவிட்டது. இங்கு வந்ததால் வேலைக்கு செல்ல முடியவில்லை என்றனர்.

