/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
முன்னாள் படைவீரர் குறைதீர் கூட்டம்
/
முன்னாள் படைவீரர் குறைதீர் கூட்டம்
ADDED : ஜன 14, 2024 05:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை மாவட்ட முன்னாள் படைவீரர்கள் படைப்பணியாற்றுவோர், சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூடத்தில் ஜன.30 காலை 10:30 மணிக்கு நடக்கவுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர், படைவீரர், சார்ந்தோர் அன்று காலை 9:00 மணிக்கு முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தங்களது குறைகளை இரட்டை பிரதிகளாக வழங்கி நிவர்த்தி செய்து பயனடையலாம் என கலெக்டர் தெரிவித்தார்.

