ADDED : ஜன 19, 2024 05:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி: பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே கொட்டப்படும் குப்பைகளால் துர்நாற்றம் வீசுகிறது.
இவ்வொன்றியத்தில் 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்லும் மருத்துவமனையாக பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இம்மருத்துவமனை முன்பாக அப்பகுதி மக்கள் சிலர் குப்பையை கொட்டி தீவைத்து எரித்து வருகின்றனர். குறிப்பாக காம்பவுண்ட் சுவரை ஒட்டிய கால்வாயில் கொட்டப்படும் குப்பை மழைக்காலங்களில் தண்ணீரில் மூழ்கி துர்நாற்றம் வீசுகிறது. மருத்துவமனை வளாகத்தை சுற்றி குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும்.

