/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அரசு ஊழியர் சங்க செயற்குழு கூட்டம்
/
அரசு ஊழியர் சங்க செயற்குழு கூட்டம்
ADDED : ஜன 24, 2024 04:36 AM
சிவகங்கை : சிவகங்கையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் கண்ணதாசன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் சிறப்புரை, மாநில பொது செயலாளர் செல்வம் விளக்க உரை ஆற்றினர்.
சிவகங்கை, காளையார்கோவில் ஊழியர்களுக்கு வீட்டு வாடகை படி பிரச்னை தீர்க்க கோரி மாவட்ட கருவூலகம்முன் ஆர்ப்பாட்டம் நடத்துவது. உறுப்பினர் சேர்க்கை இயக்கம் நடத்துவது. ஜாக்டோ - ஜியோ போராட்ட நடவடிக்கைகளை துரித படுத்த வேண்டும் என தீர்மானித்தனர். மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் லதா நன்றி கூறினார்.
கூட்டத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க தலைவர் பாண்டி, பொதுப்பணித்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் கோமலைக்குமரன், மாவட்ட செயலாளர் குணசேகரன், மருத்துவத்துறை அலுவலர் சங்க மாநில துணை தலைவர் மூவேந்தன், மாவட்ட துஐண தலைவர் கார்த்திக், மாவட்ட இணை செயலாளர் சின்னப்பன் பங்கேற்றனர்.

