/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காத்திருப்பு புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து பலர் குறைகளை தீர்க்க முடியாத குறை தீர் முகாம்
/
காத்திருப்பு புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து பலர் குறைகளை தீர்க்க முடியாத குறை தீர் முகாம்
காத்திருப்பு புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து பலர் குறைகளை தீர்க்க முடியாத குறை தீர் முகாம்
காத்திருப்பு புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து பலர் குறைகளை தீர்க்க முடியாத குறை தீர் முகாம்
ADDED : ஜன 21, 2024 03:27 AM
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்து ஆறு மாதத்திற்கு மேலாகியும் இன்னும் கார்டு வழங்கப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 9 தாலுகாவில் 15 லட்சத்திற்கும் மேல் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் புதிதாக திருமணமாகி தனி குடித்தனம் செல்வோர் புதிதாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து ஆறு மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை ரேஷன் கார்டு வழங்கவில்லை. சிவகங்கை தாலுகாவில் மட்டும் 557 பேர் புதிய ரேஷன் கார்டுக்கு பதிந்து 6 மாதமாக காத்திருக்கின்றனர். ரேஷன் கார்டு இல்லாததால் தமிழக அரசு வழங்கக்கூடிய குடிமைப் பொருட்கள் பெற முடிவதில்லை. காஸ் இணைப்பு, முதல்வரின் மருத்துவ காப்பீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பெற முடியவில்லை எனவும் புகார் தெரிவிக்கின்றனர்.
சிவகங்கை பிரவீன் கூறுகையில், புதிய ரேஷன் கார்டு கேட்டு எனது உறவினர் பதிந்து நான்கு மாதம் ஆகி உள்ளது. இதுவரை ரேஷன் கார்டு வரவில்லை. நேற்று நடந்த ரேஷன் கார்டு குறைதீர் முகாமில் புகார் அளித்தேன். இது போல் பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. நான்கு மாதமாக ரேஷன் கார்டுக்காக அலைந்து கொண்டிருக்கிறேன். ரேஷன் கார்டு இல்லாமல் காஸ் இணைப்பு, மருத்துவ காப்பீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பெற முடியவில்லை. மாவட்ட நிர்வாகம் விரைந்து ரேஷன் கார்டு கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
வட்ட வழங்க தாசில்தார் மகேஸ்வரன் கூறுகையில், ரேஷன் கார்டில் பெயர் மாற்றம், முகவரி மாற்றம், அலைபேசி எண் மாற்றம், உள்ளிட்ட சேவைகளை குறைதீர் முகாம்களில் செய்து வருகிறோம். புதிய ரேஷன் கார்டுகள் இ சேவை மையங்களில் தான் பதிய வேண்டும். புதிய ரேஷன் கார்டுக்கு பதிந்தவர்களுக்கான சரிபார்ப்பை தற்போது எங்களால் பார்க்க முடியாது. அந்த வெப்சைட்டை தற்போது அரசு நிறுத்தி வைத்துள்ளது. தேர்தல் வருவதால் கூடிய விரைவில் ரேஷன் கார்டு வலைதளம் சரி செய்யப்படும். புதிதாக பதிந்த அனைவருக்கும் கூடிய விரைவில் புதிய கார்டு வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.

