sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

தமிழகத்தில் அதிக மலக்குழி மரணம் துாய்மை பணியாளர் ஆணைய தலைவர்

/

தமிழகத்தில் அதிக மலக்குழி மரணம் துாய்மை பணியாளர் ஆணைய தலைவர்

தமிழகத்தில் அதிக மலக்குழி மரணம் துாய்மை பணியாளர் ஆணைய தலைவர்

தமிழகத்தில் அதிக மலக்குழி மரணம் துாய்மை பணியாளர் ஆணைய தலைவர்


ADDED : ஜன 14, 2024 04:58 AM

Google News

ADDED : ஜன 14, 2024 04:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி : தமிழகத்தில் தான் அதிக அளவில் மலக்குழி மரணங்கள் நிகழ்வதாக தேசிய துாய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் தெரிவித்தார்.

காரைக்குடி வள்ளலார் தெருவை சேர்ந்த நாச்சியப்பன் மகன் சேவகப் பெருமாள் 45. நகராட்சியில் தூய்மை பணியாளரான இவர் செப்டிக் டேங்க் துாய்மைப்பணியின் போது உயிரிழந்தார். இவரது குடும்பத்தினருக்கு ரூ.15 லட்சம் நிதி உதவி வழங்கிட தேசிய துாய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் காரைக்குடிக்கு வந்திருந்தார். இதில், கலெக்டர் ஆஷா அஜித், காரைக்குடி சேர்மன் முத்துதுரை,பா.ஜ., பட்டியல் அணி மாநில துணைத்தலைவர் ஆதினம், மாவட்ட பொதுச் செயலாளர் நாகராஜன், துணைத் தலைவர் நாராயணன் கலந்து கொண்டனர்.

தேசிய துாய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் கூறுகையில்; தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் துாய்மை பணியாளர்களுக்கு அதிக அளவில் முகாம் அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி இறப்புகளை தவிர்க்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் 227 மலக்குழி மரணங்கள் நிகழ்ந்துள்ளது. பல குறியீடுகளில் தமிழகம் முதல் மாநிலமாக திகழ்ந்தாலும் மலக்குழி மரணங்களிலும் முதல் இடத்தில் உள்ளது. அதிக இயந்திரங்களை பயன்படுத்தி, விஷ வாயுவால் ஏற்படும் உயிரிழப் புகளை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us