/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
'வாழ்நாள் வரை வாசித்தால் சிறகுகள் தானே விரியும்'
/
'வாழ்நாள் வரை வாசித்தால் சிறகுகள் தானே விரியும்'
ADDED : ஜன 26, 2024 05:31 AM
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே ஏரியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் கூடல் விழா நடந்தது. பொறுப்புத் தலைமை ஆசிரியர் திருமுருகன் தலைமை வகித்தார். ஆசிரியர் பிரபு வரவேற்றார்.
தமிழாசிரியர் ராஜபாண்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். தமிழாசிரியர் ரமேஷ் முன்னிலை வகித்தார். விழாவில் 'சிறகை விரி, சிகரம் தொடு' எனும் தலைப்பில் கவிஞர் இரா.சொக்கநாதன் பேசியதாவது, திருக்குறள், சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம் போன்ற காப்பியங்கள் உள்ளிட்ட பல்வேறு தமிழ் இலக்கிய பாடங்களை மாணவர்கள் தேர்வுக்காக மட்டுமல்லாமல் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்வதற்காகவும் படிக்க வேண்டும்.
இளைய தலைமுறை நுாலகங்களை பயன்படுத்தும் பழக்கம் குறைந்து வருகிறது. தேர்வுக்கு முதல் நாள் மட்டும் இன்றி வேலை கிடைக்கும் நாள் வரை மட்டுமின்றி வாழ்நாள் வரை வாசித்தால் சிறகுகள் தானே விரியும், சிகரங்கள் தானே வசப்படும். தமிழ் இலக்கியங்கள் தன்னம்பிக்கை, ஒழுக்கம், வெற்றி மனோபாவம் ஆகியவற்றை உருவாக்கி வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தி சமூகத்தில் பெரும் மாற்றங்களை உருவாக்குபவை.
எனவே தொடர்ந்து படிக்க வேண்டும். திரைப்படங்களில் பழைய இலக்கியங்களின் கருத்துக்களும் சந்தமும் இடம்பெறுகிறது என்றால் காலம் கடந்தும் பழைய இலக்கியங்கள் நம்மை ஆளுமை செய்கிறது என்பது உறுதியாகிறது, என்றார். ஆசிரியர் ராஜேஷ் கண்ணன் நன்றி கூறினார்.

