/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கணியன் பூங்குன்றனார் நினைவுத்துாண் திறப்பு
/
கணியன் பூங்குன்றனார் நினைவுத்துாண் திறப்பு
ADDED : ஜன 24, 2024 04:57 AM
கண்டவராயன்பட்டி : திருப்புத்துார் ஒன்றியம் மகிபாலன்பட்டியில் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' பாடிய சங்ககால புலவர் கணியன் பூங்குன்றனார் நினைவு துாணை காணொளி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அமைச்சர் பெரியகருப்பன் குத்துவிளக்கேற்றி, மலரஞ்சலி செலுத்தினார்.
மகிபாலன்பட்டி ஊராட்சியில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ரூ 21.28 லட்சம் மதிப்பில் நினைவுத்துாண் அமைக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதை தொடர்ந்து கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் அமைச்சர் பெரியகருப்பன் நினைவுத்துாண் வளாகத்தில் குத்துவிளக்கேற்றி துவக்கி, மலரஞ்சலி செலுத்தினார். மானாமதுரை எம்.எல்.ஏ.,தமிழரசி, எஸ்.பி.அரவிந்த், ஊராட்சித் தலைவர் பாஸ்கரன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி நினைவுத்துாணுக்கு மலரஞ்சலி செலுத்தினர்.
மாவட்ட தமிழ்வளர்ச்சித்துறை அலுவலர் நாகராஜன், ஆர்.டி.ஓ. பால்துரை,தாசில்தார் i ஆனந்த்,டி.எஸ்.பி.ஆத்மாநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நினைவுத்துாண் அமைக்க பாடுபட்ட அலுவலர் நாகராஜன், ஊராட்சி தலைவர் பாஸ்கரன் ஆகியோரை அமைச்சர் கெளரவப் படுத்தினார்.

