/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருவள்ளுவர் விஷயத்தில் முதல்வர் கருத்தில் உடன்பாடு சொல்கிறார் கார்த்தி எம்.பி.,

ADDED : ஜன 19, 2024 02:13 AM
சிங்கம்புணரி:திருவள்ளுவர் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் கருத்தோடு உடன்படுவதாக கார்த்தி எம்.பி., தெரிவித்தார்.
சிங்கம்புணரியில் பழநி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு தங்கும் வசதி, அன்னதானத்தை துவக்கி வைத்து அவர் தெரிவித்ததாவது:
தமிழகத்தில் இண்டியா கூட்டணிக்கு தான் வெற்றிவாய்ப்பு உள்ளது. திருவள்ளுவருக்கு மத சாயம் பூசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் அனைத்து மதத்திற்கும் பொதுவானவர். திருவள்ளுவர் விஷயத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்த கருத்தோடு நான் உடன்படுகிறேன்.
ராமர் கோயிலை பா.ஜ., அரசியல் ஆக்குகிறது. என்னைப் பொறுத்தவரை நாட்டில் ஏற்கனவே உள்ள கோயில், மசூதி, தேவாலயங்கள் போதுமானது. அவற்றை பராமரித்தாலே போதும். புதிதாக ஏதும் கட்ட தேவையில்லை. புதிய மருத்துவமனை, புதிய விமான நிலையம், புதிய ரயில் நிலையம் இவை தான் நாட்டிற்கு தேவை.
கட்சியில் இருந்து எனக்கு எந்த நோட்டீசும் வரவில்லை. மோடி குறித்து நான் தெரிவித்த கருத்துக்கள் தவறாக பரப்பப்பட்டு விட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.