/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மண்பாண்ட பொருட்களை சுட வைக்க மின்சூளை:மானாமதுரை தொழிலாளர்கள் கோரிக்கை
/
மண்பாண்ட பொருட்களை சுட வைக்க மின்சூளை:மானாமதுரை தொழிலாளர்கள் கோரிக்கை
மண்பாண்ட பொருட்களை சுட வைக்க மின்சூளை:மானாமதுரை தொழிலாளர்கள் கோரிக்கை
மண்பாண்ட பொருட்களை சுட வைக்க மின்சூளை:மானாமதுரை தொழிலாளர்கள் கோரிக்கை
ADDED : ஜன 23, 2024 04:37 AM

மானாமதுரையில் 300-க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் வருடம் தோறும் சீசனுக்கு தகுந்தாற்போல் மண்பாண்ட பொருட்களை தயார் செய்து விற்பனை செய்து வருகின்றனர்.
இங்கு தயாரிக்கப்படும் மண்பாண்ட பொருட்களை சுட வைப்பதற்காக பழைய முறைப்படி மண்பாண்டங்களை குவித்து வைத்து அதற்கு மேல் வைக்கோல் மற்றும் முட்களை போட்டு பின்னர் பூசிய பிறகு சூளையில் வைத்து சுட வைக்கின்றனர்.
இதனால் ஏராளமான பொருள் செலவு ஏற்படுவதோடு மட்டுமில்லாமல் ஆட்கள் பற்றாக்குறை காரணமாக காலதாமதம் ஏற்படுவதால் மானாமதுரையில் மண்பாண்ட தொழிலாளர்களுக்காக மின்சார சூளை அமைத்து தர வேண்டுமென தமிழக அரசிடம் நீண்ட வருடங்களாக தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
மண்பாண்ட தொழிலாளி பாண்டியராஜன் கூறுகையில், மானாமதுரையில் பாரம்பரியமான மண்பாண்ட பொருட்கள் வருடம்தோறும் தயாரிக்கப்பட்டு வருகிறது.இங்கு தயாரிக்கப்படும் மண்பாண்ட பொருட்களுக்கென்று மவுசு உள்ளது.தற்போது மண்பாண்ட பொருட்களை பழைய முறைப்படி சூளை வைப்பதினால் கூடுதலான செலவும், கால தாமதமும் ஏற்பட்டு வருகிறது.
மேலும் இங்கு 2 இடங்களில் மட்டுமே சூளை வைக்கப்பட்டு வருவதினால் ஏராளமான தொழிலாளர்கள் தங்களது மண்பாண்ட பொருட்களை சுட வைப்பதற்காக நீண்ட மாதங்கள் கூட காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது.
ஆகவே இதனை தவிர்க்கும் வகையில் மானாமதுரையில் மண்பாண்ட பொருட்களை சுட வைக்கும் மின்சார சூளை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

