ADDED : ஜன 24, 2024 05:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : அமெரிக்கா ஹூஸ்டன் பல்கலை தமிழ் ஆராய்ச்சிக்கான தனி இருக்கை அமைத்துக்கொடுத்த ஹூஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை டெக்ஸாஸ் என்ற அமைப்பின் சார்பாக பண்பாட்டு பாராட்டு விழா நாட்டரசன் கோட்டையில் நடந்தது.
தலைவர் ஷாம்கண்ணப்பன் தலைமை வகித்தார். மெளண்ட் லிட்ரா ஜீ சீனியர் செகன்டரி பள்ளித்தலைவர் பால.கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டில் அதிக மாடுகளை பிடித்து தமிழக அரசால் முதல்பரிசு பெற்ற வீரராக அறிவிக்கப்பட்ட கருப்பாயூரணி கார்த்திக்கு பசுவும் கன்றும் வழங்கப்பட்டது. ஆய்வு இருக்கை செயலாளர் பெருமாள் அண்ணாமலை, பள்ளி பொருளாளர் கலைக்குமார், மீனாட்சி அக்ரோ மேலாளர் கண்ணன் கலந்து கொண்டனர்.

