நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி : காரைக்குடி ராகவேந்திரா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் உள்ள வித்யா கணபதி ஆலய கும்பாபிஷேக விழா நடந்தது.
ஜன.31ம் தேதி விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி மற்றும் முதற்கால யாக வேள்வியுடனf கும்பாபிஷேக விழா தொடங்கியது, நேற்று காலை விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை மற்றும் இரண்டாம் கால பூஜை நடந்தது. தொடர்ந்து காலை 9:00 மணிக்கு கடம் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. காலை 9 :15 மணிக்கு வித்யா கணபதி விமான கும்பாபிஷேகம் மற்றும் மூலவர் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடந்தது. விழாவில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர்.

