ADDED : பிப் 24, 2024 04:59 AM
பன்னாட்டு கருத்தரங்கம்
காரைக்குடி: காரைக்குடி டாக்டர் உமையாள் ராமநாதன் மகளிர் கல்லுாரியில் தகவல் தொழில்நுட்பவியல் துறையில் தகவல் தொழில்நுட்பத்தில் சமீபத்திய கண்டுபிடிப்புகள் என்னும் தலைப்பிலான பன்னாட்டு கருத்தரங்கம் நடந்தது.
அழகப்பா பல்கலை,திருச்சி எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், தஞ்சாவூர் தமிழ் பல்கலை., மற்றும் பெங்களூரு சிஎம் ஆர்.,தொழில்நுட்ப நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் இருந்து ஆராய்ச்சி அறிஞர்கள் மற்றும் சுய ஆராய்ச்சியாளர்களால் 30 ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டது.தகவல் தொழில்நுட்பவியல் துறை தலைவர் விசாலாட்சி வரவேற்றார்.
கல்லுாரி முதல்வர் ஹேமமாலினி தலைமையேற்றார். அழகப்பா பல்கலை பேராசிரியர் மகேஷ், ப்ரீத்தா ஸ்ரீ பேசினர். உதவி பேராசிரியர் ஆனந்த ஜோதி அறிக்கை சமர்ப்பித்தார்.
பேராசிரியர் சிவகாமி நன்றி கூறினார்.
பயிற்சி முகாம்
பூவந்தி: பூவந்தியில் மதுரை சிவகாசி நாடார் பயோனியர் மீனாட்சி மகளிர் கலை கல்லுாரியில் பெண்களுக்கான கைவினை பொருட்கள் தயாரிப்பு பயிற்சி முகாம் நடந்தது. பயிற்சியாளர் கனிமொழி பூவந்தி கிராம பெண்களுக்கு கைவினை பொருட்கள் தயாரிப்பு குறித்தும், விற்பனை குறித்து பயிற்சி வழங்கினார். கை வினை பொருட்கள் தயாரித்து முதலிடம் பிடித்த பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
விளையாட்டு விழா
திருப்புத்துார்: திருப்புத்துார் ஆறுமுகம்பிள்ளை சீதைஅம்மாள் கல்லுாரியில் விளையாட்டு விழா நடந்தது. முதல்வர் கேப்டன் கேஆர்.ஜெயக்குமார் வரவேற்றார். செயலர் நா.ஆறுமுகராஜன் தலைமை வகித்து போட்டிகளை துவக்கி வைத்தார்.
தட களப் போட்டியில் தனிநபர் மற்றும் குழு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அழகப்பா பல்கலை. உடற்கல்வி கல்லுாரி முதல்வர் (பொ) கே.முரளிராஜன் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
துணை முதல்வர் கோபிநாத், சுயநிதிபிரிவு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ராஜமாணிக்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பரிசளிப்பு விழா
காரைக்குடி: அமராவதி புதுார் சாரதா நிகேதன் மகளிர் கல்லுாரியில் உயர் தொழில் நுட்பவியல் துறைக்கான ஆய்வகத் திறப்பு விழா மற்றும் துறைகளுக்கு இடையே நடந்த கலை இலக்கிய போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா நடந்தது. ஆசிரம அம்பாக்கள் யத்தீஸ்வரி சாரதீஸ்வரி பிரியா அம்மா யத்தீஸ்வரி ராமகிருஷ்ண பிரியா அம்பா தலைமையில் நடந்தது.
முதல்வர் சிவசங்கரி ரம்யா முன்னிலை வகித்தார். பேராசிரியை மாலதி வரவேற்றார். லண்டன் முருகேசன் ஆய்வகத்தை திறந்து வைத்தார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. கல்லுாரி இயக்குனர் மீனலோச்சனி நன்றி கூறினார்.
ஆண்டு விழா
சிங்கம்புணரி: புழுதிபட்டி துவக்கப்பள்ளி ஆண்டு விழா வட்டார கல்வி அலுவலர் கருப்பசாமி தலைமையில் நடந்தது. ஆசிரியர் பயிற்றுநர்கள் கணேசன், கிறிஸ்டோபர், ஜெயலட்சுமி முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் ஜேம்ஸ் வரவேற்றார். விளையாட்டுப் போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
பரிசுகளை மதுரை மணி, அவனியாபுரம் நடுநிலைப்பள்ளி ஆசிரியர் மீனாராணி வழங்கினர். கனரா வங்கி மதுரை மண்டல துணை பொது மேலாளர் காந்தி பள்ளிக்கு பீரோ வழங்கினார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் புஷ்பவல்லி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கலை நிகழ்ச்சி ஏற்பாடுகளை உதவி ஆசிரியர்கள் மாலா, வசந்தராணி, சரசம் செய்திருந்தனர். உதவி ஆசிரியர் ஜெபஸ்டின் நன்றி கூறினார்.

