/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஊராட்சி அலுவலக கட்டட திறப்பு கல்வெட்டில் பெயர்: பா.ஜ., புகார்
/
ஊராட்சி அலுவலக கட்டட திறப்பு கல்வெட்டில் பெயர்: பா.ஜ., புகார்
ஊராட்சி அலுவலக கட்டட திறப்பு கல்வெட்டில் பெயர்: பா.ஜ., புகார்
ஊராட்சி அலுவலக கட்டட திறப்பு கல்வெட்டில் பெயர்: பா.ஜ., புகார்
ADDED : ஜன 14, 2024 04:53 AM
மானாமதுரை, : வேம்பத்துாரில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தில் ரூ.26 லட்சம் செலவில் புதிதாக ஊராட்சி அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.
இதனை 4ம் தேதி அமைச்சர் பெரிய கருப்பன் திறந்து வைத்தார். தற்போது வைக்கப்பட்டுள்ள கல்வெட்டில் அமைச்சர் பெரிய கருப்பன், மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித், திட்ட இயக்குனர், ஊராட்சி ஒன்றிய தலைவர்,ஊராட்சி தலைவர், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் மற்றும் பி.டி.ஓ.,க்கள் பெயர் இடம் பெற்றுள்ளது.
மத்திய அரசு நிதியில் கட்டப்பட்டுள்ள இக்கட்டடத்தில் வைக்கப்பட்டுள்ள கல்வெட்டில் பிரதமர் மோடி பெயரோ அல்லது படமோ இடம் பெறாமல் உள்ளதால் கல்வெட்டை உடனடியாக அகற்ற வேண்டும் என்று பா.ஜ., ஒன்றிய தலைவர் ரவிச்சந்திரன் மானாமதுரை ஊராட்சி ஒன்றிய பி.டி.ஓ.,விடம் புகார் தெரிவித்தார்.
மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் கேட்டபோது, வைக்கப்பட்டுள்ள கல்வெட்டை அகற்றிவிட்டு அரசின் வழிகாட்டுதல் படி புதிதாக கல்வெட்டு வைக்க ஊராட்சி தலைவருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.