ADDED : ஜன 24, 2024 05:34 AM
சிவகங்கை : சிவகங்கையில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாள் விழா பொதுமக்களால் கொண்டாடப்பட்டது. சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு அமைந்துள்ள அவரது சிலைக்கு சிவகங்கை எம்.எல்.ஏ., செந்தில்நாதன், எம்.பி., கார்த்தி, நகராட்சி தலைவர் துரை ஆனந்த், உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், வணிகர்கள், பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பா.ஜ., நகர் தலைவர் உதயா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மகளிர் அணி மாவட்ட பொருளாளர் ேஹம மாலினி, நகர செயலாளர் முத்திருளாண்டி, இளைஞர் அணி தலைவர் சதீஸ், நகர் பொது செயலாளர் பாலா கலந்து கொண்டனர்.
மானாமதுரை
தேவர் சிலை அருகில் நேதாஜி படத்திற்கு நேதாஜி அறக்கட்டளை நிர்வாகிகள் கிருஷ்ணத்தேவர், செல்வராமன் மாலை அணிவித்து மக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
திருப்புவனம்
திருப்புவனத்தைச் சேர்ந்தவர் ஆதிமூலம் 14வது வயதில் பர்மா சென்றவர் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்து பணியாற்றி பர்மா, ரங்கூன் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றுள்ளார். சுதந்திரத்திற்கு பின் இந்தியா வந்தவர் 94 வது வயதில் உயிரிழந்தார். அவர் உயிருடன் இருந்தவரை நேதாஜியின் பிறந்த நாளை திருப்புவனத்தில் கொண்டாடியுள்ளார். அவர் இறந்த பின் அவரது மகன் நாகராஜ் நேதாஜியின் பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.
நேற்று நேதாஜி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன் மக்களுக்கும் மாணவ, மாணவியர்களுக்கும் இனிப்பு வழங்கினார்.

