/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இடைக்காட்டூரில் நெல் கொள்முதல் நிலையம்
/
இடைக்காட்டூரில் நெல் கொள்முதல் நிலையம்
ADDED : பிப் 01, 2024 11:21 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை,- மானாமதுரை அருகே உள்ள இடைக்காட்டூர் சுற்றுவட்டார பகுதிகளில் கிணற்று பாசனத்தை கொண்டும், வைகை ஆற்று பாசனத்தை நம்பியும் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் விவசாயிகள் நெல் விவசாயம் செய்தனர்.
கடந்த சில வாரங்களாக அறுவடை துவங்கி நடைபெற்று வருவதையடுத்து நெல் கொள்முதல் நிலையத்தை விரைவில் துவக்க வேண்டுமென்று ஊராட்சி தலைவர் சண்முகநாதன் கோரிக்கை விடுத்து வந்தார்.
நேற்று இடைக்காட்டூரில் முருகன் கோவில் அருகே நெல் கொள்முதல் நிலையத்தை மானாமதுரை ஊராட்சி ஒன்றிய தலைவர் லதா அண்ணாதுரை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

