
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளைஞர் தற்கொலை
சிவகங்கை அண்ணாமலைநகர் ஞானபிரகாசம்மகன் ஜான்கென்னடி 35, இவர் மது அருந்தும்பழக்கம் உள்ளவர். இவரை மனைவி செல்வி மது குடிக்க கூடாது என்று கண்டித்துஉள்ளார். இதனால் மனவிரக்தி அடைந்து ஜான்கென்னடி துாக்கிட்டு இறந்தார். சிவகங்கை போலீசார் விசாரிக்கின்றனர்.
மஞ்சுவிரட்டில் மேலும் ஒருவர் இறப்பு
சிவகங்கை மாவட்டம் வெளியாத்துார் கிராமத்தை சேர்ந்தவர் வீரப்பன் 83. இவர் ஜன.19 அன்று கண்டுப்பட்டியில் நடந்த மஞ்சுவிரட்டை பார்ப்பதற்கு சென்றுள்ளார். அங்கு மஞ்சுவிரட்டை வேடிக்கை பார்த்த போது எதிர்பாராதவிதமாக மாடு முட்டியதில் காயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை சிவகங்கை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். சிகிச்சையில் இருந்தவர் இறந்தார். மதகுபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

