/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கீழச்சிவல்பட்டியில் பொங்கல் விழா துவக்கம்
/
கீழச்சிவல்பட்டியில் பொங்கல் விழா துவக்கம்
ADDED : ஜன 19, 2024 05:01 AM
திருப்புத்துார்: திருப்புத்தூர் ஒன்றியம் கீழச்சிவல்பட்டியில் தமிழ்மன்றம் சார்பில் 68 ம் ஆண்டு பொங்கல் விழா துவக்கம் நடந்தது.
கீழச்சிவல்பட்டியில் தமிழ்மன்றம் சார்பில் பாடுவார் முத்தப்பர் கோட்டத்தில் பொங்கலை முன்னிட்டு 3 நாட்கள் விழா நடைபெறும்.
நேற்று 68 ஆம் ஆண்டு விழா துவங்கியது. முதல் நாள் நிகழ்வில் சோலையப்பன் தமிழ் வணக்கத்துடன் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். அழகப்பன் வரவேற்றார். தொடர்ந்து குன்றக்குடி பொன்னம்பல அடிகள் தலைமையுரையாற்றினார். தாசில்தார் ஆனந்தன் முன்னிலை வகித்தார்.
பின்னர் கவியரங்கம் நடந்தது. கவியரங்கத் தலைவராக கவிஞர் பழனியப்பனும், வாழை குறித்து இளங்கோவன், அரிசி குறித்து குமார், மஞ்சள் குறித்து அலமேலுமங்கைசீனிவாசன், தேங்காய் குறித்து அரசிமுத்துக்குமார், பானை குறித்து மீனா தமிழரசிமுத்து
வீரப்பன், கரும்பு குறித்து ஜோதிசுந்தரேசன் கவிபாடினர்.
பின்னர் கீழச்சிவல்பட்டி பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடந்தன. ஏற்பாட்டினை மன்ற செயலர்கள் பழனியப்பன், அழகுமணிகண்டன், விஸ்வநாதன், சீனிவாசன் செய்தனர். ராமநாதன் நன்றி கூறினார்.

