நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: ஒக்கூரில் கவியரசு கண்ணதாசன் கலை இலக்கிய ஆண்டு பொங்கல் விழா நடந்தது.
திரைப்பட தயாரிப்பாளர் ராம்வாசு தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் பூமா முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் தளவாய் நாராயணசாமி வரவேற்றார். கலை இலக்கிய மன்ற போட்டிகள், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. திரைப்பட நடிகர் இளவரசு, இயக்குனர் ராசி அழகப்பன், பட்டிமன்ற பேச்சாளர் கிருஷ்ணவேணி, சேக்கப்ப, சிதம்பரம், சம்பத், ராமசாமி கலந்துகொண்டனர்.

