/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அதிகாரிகள் கவனக்குறைவு மின்வாரிய ஊழியர் பலி
/
அதிகாரிகள் கவனக்குறைவு மின்வாரிய ஊழியர் பலி
ADDED : ஜன 23, 2024 12:49 AM

திருப்புவனம் : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் புதுாரைச் சேர்ந்த ஆடியராஜா மகன் மாரிபாண்டி 27, மின்வாரிய கேங்மேன்.
நேற்று காலை நரிக்குடி ரோடு பகுதியில் மின்தடை ஏற்பட்டதால், தனியார் செங்கல் சூளை அருகே உள்ள டிரான்ஸ்பார்மரில் இணைப்பை துண்டித்து விட்டு பழுதை சரி செய்ய மேலே ஏறினார். ஆனால் மின்சாரம் தாக்கி துாக்கி வீசப்பட்டு இறந்தார்.
மின்வாரிய ஊழியர்கள் கூறியது:
திருப்புவனத்தில் கிழக்கு, மேற்கு என இரு பிரிவுகள் உள்ளன. காற்று வீசும் காலங்களில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படும். இதை தவிர்க்க துணை மின்நிலையத்தில் இருந்து நேரடியாக இணைப்பு கொடுக்கப்படும்.
நேரடி இணைப்பு கொடுக்கப்பட்டது குறித்து ஊழியரிடம் அறிவுறுத்தியிருக்க வேண்டும், அதிகாரிகள் அதை செய்யாததால் மின்சாரம் தாக்கி வாலிபர் இறந்தார்.
இவ்வாறு கூறினர்.
மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'துணை மின் நிலையத்தில் இருந்து நேரடி இணைப்பு வழங்கப்படவில்லை. குறிப்பிட்ட இடத்தில் லைன் ஜம்பர் இணைப்பு கொடுத்திருக்கின்றனர். யார் செய்தது என விசாரித்து வருகிறோம்' என்றனர்.

