/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காளையார்கோவில் மில்லை திறக்க கோரி ஆர்ப்பாட்டம்
/
காளையார்கோவில் மில்லை திறக்க கோரி ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 25, 2025 03:14 AM

சிவகங்கை : காளையார்கோவிலில் மத்திய அரசின் காளீஸ்வரா என்.டி.சி., பஞ்சாலை செயல்பட்டு வந்தது. 2021 கொரோனா காலத்தில் இந்த மில்லை மூடினர். தொடர்ந்து இந்த மில் இயங்கவில்லை.
இங்கு பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு 8 மாத சம்பளமும் வழங்கவில்லை. 24 மாத நிலுவை சம்பளத்தையும் மில் நிர்வாகம் வழங்கவில்லை. மேலும் இங்கு பணிபுரிந்த ஊழியர்களுக்கு 5 ஆண்டிற்கான போனஸ் வழங்கவேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணிக்கொடை வழங்க வேண்டும்.
தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மூடப்பட்ட பஞ்சாலையை திறக்க வலியுறுத்தி நேற்று அனைத்து தொழிலாளர் சங்கங்கள் சார்பில் காளையார்கோவில் மில் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அதனை தொடர்ந்து காளையார்கோவில் பஸ் ஸ்டாண்ட் முன் அனைத்து தொழிலாளர் சங்கம், சர்வ கட்சிகள், வர்த்தக, வணிக சங்கம், ஆட்டோ, வேன் சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.