ADDED : ஜன 19, 2024 04:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: அனைத்து வட்ட வழங்கல் அலுவலகத்தில் நாளை (ஜன.,20) ரேஷன் குறைதீர் முகாம் நடைபெறும் என மாவட்ட வழங்கல் அலுவலர் சபிதாள் பேகம் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, நாளை (ஜன.,20) காலை 10:00 மணி முதல் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும், சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறும்.
அன்றைய தினம் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய ரேஷன் கார்டு, நகல் அட்டை, அலைபேசி எண் பதிவு மாற்றம் செய்தல், ரேஷன் கடைகளின் செயல்பாடு மற்றும் பொருளின் தரம் குறித்து புகார்களை தெரிவிக்கலாம், என்றார்.

