நாச்சியாபுரம் : திருப்புத்துார் அருகே தென்கரை அம்பேத்கர் சிலை அருகில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
கல்லல் ஒன்றியம் தென்கரையில் அம்பேத்கருக்கு 1991 ல் பஸ் நிறுத்தம் எதிரில் 3 சென்ட் இடத்தில் சிலை அமைக்கப்பட்டது. ஏழூர்பத்து ஆதிதிராவிட ஐக்கிய சங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் அம்பேத்கர் சங்கம் சார்பில் நிறுவப்பட்டிருந்தது. சிலைக்கு அருகிலுள்ள இடம் காலப்போக்கில் ஆக்கிரமிப்புக்குள்ளாகி பல கடைகள் கிளம்பின.
இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி 2001ல் இருந்து பல்வேறு ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்தப்பட்டது. தற்போது மதுரை ஐகோர்ட்டில் வழக்கிடப்பட்டு ஆக்கிரமிப்பு அகற்ற உத்தரவிட்டது. நேற்று அப்பகுதியில் நில அளவீடு செய்யப்பட்டு தாசில்தார் ஆனந்த் முன்னிலையில் வருவாய்த்துறையினர்,நெடுஞ்சாலைத்துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். நாச்சியாபுரம் போலீசார் பாதுகாப்பு அளித்தனர்.

