/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
குடிநீர் குழாய் சீரமைப்பு * தினமலர் செய்தி எதிரொலி
/
குடிநீர் குழாய் சீரமைப்பு * தினமலர் செய்தி எதிரொலி
குடிநீர் குழாய் சீரமைப்பு * தினமலர் செய்தி எதிரொலி
குடிநீர் குழாய் சீரமைப்பு * தினமலர் செய்தி எதிரொலி
ADDED : ஜன 19, 2024 04:52 AM

காளையார்கோவில்: தினமலர் செய்தி எதிரொலியால், காளையார்கோவிலில் உடைந்த காவிரி குடிநீர் குழாயை சீரமைத்தனர்.
திருச்சி மாவட்டம், முத்தரசநல்லுார் காவிரி ஆற்றில் கிணறு அமைத்து புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டம் வழியாக ராமநாதபுரத்திற்கு காவிரி குடிநீர் கொண்டு செல்கின்றனர். அக்கால கட்டத்தில் பொருத்திய குழாய்கள் பலமிழந்து, ஆங்காங்கே உடைந்து வருகிறது.
காளையார்கோவில், பரமக்குடி ரோட்டில் தொடக்க கூட்டுறவு வங்கி முன், காவிரி குடிநீர் குழாய் உடைந்து, குடிநீர் விரயமானது.
இது குறித்து தினமலரில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் பி.எஸ்.என்.எல்., அலுவலர்கள் இணைந்து தொடக்க கூட்டுறவு வங்கி முன் சேதமான குடிநீர் குழாயை சீரமைத்தனர்.