/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சங்கரபதிகோட்டையை சீரமைக்க ரூ.9.03 கோடி தினமலர் செய்தியால் சுற்றுலா தலமாகிறது
/
சங்கரபதிகோட்டையை சீரமைக்க ரூ.9.03 கோடி தினமலர் செய்தியால் சுற்றுலா தலமாகிறது
சங்கரபதிகோட்டையை சீரமைக்க ரூ.9.03 கோடி தினமலர் செய்தியால் சுற்றுலா தலமாகிறது
சங்கரபதிகோட்டையை சீரமைக்க ரூ.9.03 கோடி தினமலர் செய்தியால் சுற்றுலா தலமாகிறது
ADDED : ஜன 23, 2024 04:35 AM

சிவகங்கை: தோண்ட... தோண்ட... புதிய வரலாற்று தடயமாக காட்சி அளிக்கும் காரைக்குடி சங்கரபதிகோட்டையை சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும் என தினமலர்இதழில் வெளியான செய்தி எதிரொலியாக கோட்டையை சீரமைக்க ரூ.9.03 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது.
சிவகங்கை மாவட்டம்,காரைக்குடி - தேவகோட்டை ரோட்டில் 4 கி.மீ., துாரத்தில் வரலாறு புதைத்திருக்கும் கோட்டை தான் சங்கரபதிகோட்டை. அழிவின் விளிம்பில் இருக்கும் இக்கோட்டையை பாதுகாக்க வேண்டியது அவசியமாகிவிட்டது. இக்கோட்டையின் ஒரு பகுதி இந்தோ - இஸ்லாமியகட்டட கலையை கொண்ட அரண்மனையாக உள்ளது.
சீதனமாக வந்த கோட்டை
1746ல் செல்லமுத்து சேதுபதி மகள் வேலு நாச்சியாரை சிவகங்கை சீமை மன்னர் முத்துவடுகநாதருக்கு திருமணம்முடித்து கொடுத்து, சீதனமாக ராமநாதபுரம் மன்னர் இக்கோட்டையை சிவகங்கைக்கு வழங்கினார்.
வேலுநாச்சியார்அவரது தலைமை பிரதானி தாண்டவராயன் பிள்ளை, மாவீரர்கள் மருது பாண்டியர்களுடன், மைசூரூ மன்னர் ைஹதர் அலியின் உதவியை பெற்று 1780ல் சிவகங்கை சீமையை மீட்டு ஆங்கிலேயர்களை பலி தீர்த்தார்.
'சங்கரபதி' பெயரில் கோட்டை
தொடர்ந்து படைகளின் பயிற்சிக்கு பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்ததில், பீரங்கி பயிற்சிக்கு பிரான்மலை, யானை, குதிரை பயிற்சிக்கு தேவையான கோட்டை இங்கு கட்டப்பட்டது.
இங்கு வீரர்களுக்கு போர் பயிற்சி அளிக்க ைஹதர் அலி படையில் இருந்து 'சங்கரபதி' என்பவரை நியமித்தனர். இதன் காரணமாவே இது சங்கரபதி கோட்டை என்றானது.
ஆங்கிலேயருடன் போரிட்ட போது பயன்படுத்திய குண்டுகள் இன்றைக்கும் இங்கு சிதறிக்கிடக்கிறது. கோட்டையின் வடக்கு பகுதியில் குளக்கரையில்'செம்பூரான் கல்வட்டங்கள்' உள்ளது.
இது போன்று வரலாற்று சிறப்பு பெற்ற இந்த சங்கரபதி கோட்டை சிதிலமடைந்து வருகிறது. இவற்றை மீட்டு, சுற்றுலாதலமாக அறிவிக்க வேண்டும் என தினமலரில் செய்தி வெளியானது.
கோட்டையை சீரமைக்கரூ. 9.03 கோடி
இதன் எதிரொலியாக சிதிலமடைந்த கோட்டையை அப்படியே புனரமைக்க பொதுப்பணித்துறை (புராதனம்) பிரிவுக்கு ரூ.9 கோடியே 3 லட்சத்து 68 ஆயிரத்து 918யை அரசு சுற்றுலாத்துறை மூலம் ஒதுக்கியுள்ளது.
கோட்டையை புனரமைக்க பொதுப்பணித்துறை டெண்டர் விடப்பட்டுள்ளது. சீரமைப்பு பணி முடிந்ததும், சிறந்த சுற்றுலா தலமாக சங்கரபதிகோட்டை திகழும் என வரலாற்று ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

