/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தேவகோட்டை அருகே சந்தனக்கூடு விழா
/
தேவகோட்டை அருகே சந்தனக்கூடு விழா
ADDED : ஜன 24, 2024 05:03 AM

தேவகோட்டை : தேவகோட்டை கண்ணங்குடி ரோட்டில் ஏழுகோட்டை நாட்டைச் சேர்ந்த அனுமந்தக்குடி உள்ளது. இங்கு செய்யது முகமது மீரா புகாரி ஜான் ஜலாலுதீன் தர்கா உள்ளது. இந்த தர்கா கந்துாரி திருவிழா கொடியேற்றம் ஜன.,௧௩ல் நடந்தது. சந்தனக்கூடு விழா ஜன.,௧௪ல் ஏழுகோட்டை நாட்டார் அழைப்பு கொடியேற்றத்துடன் துவங்கியது.
நேற்று முன்தினம் இரவு மத நல்லிணக்க சந்தனக்கூடு அனுமந்தக்குடியில் வலம் வந்தது. அதிகாலை 4:30 மணிக்கு புனித ரவஉலஆ ஷரீபுக்கு சந்தனம் பூசப்பட்டது. இரவு சந்தனக்கூடை தொடர்ந்து நேற்று மாலை பகல் சந்தனக்கூடு நடந்தது. ஏழுகோட்டை நாட்டைச் சேர்ந்த இந்துக்கள் , முஸ்லிம்கள் குடும்பம் குடும்பமாக பங்கேற்க சந்தனக்கூடு மணிமுத்தாறு சென்று மீண்டும் தர்காவை வந்தடைந்தது.

