/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அரசு மருத்துவமனையில் ஸ்கேன் பழுது
/
அரசு மருத்துவமனையில் ஸ்கேன் பழுது
ADDED : மார் 25, 2025 05:26 AM
சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் இயந்திரம் பழுதானதால் கடந்த ஒரு வாரமாக 60 பேர் ஸ்கேன் எடுப்பதற்காக காத்திருக்கின்றனர். இதனால் அவசர நோயாளிகளை மதுரைக்கு அனுப்பி வருகின்றனர்.
சிவகங்கை அரசு மருத்துவமனையில் மார்ச் 18ல் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் இயந்திரம் பழுதானது. இதனால் அவசர சிகிச்சை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மூளை, தண்டுவடம், நரம்பு, எலும்புகளில் ஏற்படும் பாதிப்பை எம்.ஆர்.ஐ., ஸ்கேன் மூலம் தான் கண்டறிய முடியும். மருத்துவமனைக்கு மூளையில் பிரச்னை, மூட்டு வலி, தசை, நரம்பியல் பிரச்னைக்காக ஸ்கேன் எடுக்க தினமும் 20 பேர் வருகின்றனர்.
இங்கு, முதல்வரின் காப்பீடு திட்டத்தில் ஸ்கேன் எடுத்துதர வேண்டும். ஆனால், பணம் கொடுப்பவர்களுக்கு தான் முன்னுரிமை தருகின்றனர். இங்கு ஒரு வாரமாக எம்.ஆர்.ஐ., ஸ்கேன் எடுக்க 60 பேர் வரை காத்திருக்கின்றனர். அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு ஸ்கேன் எடுப்பதற்காக மதுரைக்கு அனுப்பி வருகின்றனர்.
இது குறித்து ஸ்கேன் சென்டர் ஊழியர்கள் கூறியதாவது:
எம்.ஆர்.ஐ., ஸ்கேனில் அப்டேட் செய்யும் பணி நடப்பதால், இன்னும் 20 நாட்களுக்கு மேல் ஆகும். இப்பணி முடிந்த பின்னரே இங்கு ஸ்கேன் எடுக்க முடியும், என்றனர்.