ADDED : ஜன 23, 2024 04:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை கற்பூரசுந்தரபாண்டியன் ராமலட்சுமி தொடக்கப் பள்ளி ஆண்டு நிறைவு விழாவும், பள்ளி நிறுவனர் நீதிபதி ராஜசேகரன், பள்ளி புரவலர்கள் நீதிபதி ராமசுப்பிரமணியன், நீதிபதி சத்தியேந்திரன், பள்ளி தாளாளர் வழக்கறிஞர் சண்முகநாதன் நுாற்றாண்டு நிறைவு விழா கற்பூரசுந்தரபாண்டியன் ராமலட்சுமி மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
தலைவர் சாந்தா பாண்டியன் தலைமை வகித்தார். பள்ளிச்செயலர் ராஜசேகர் வரவேற்றார். முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி கற்பூரசுந்தரபாண்டியன். முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், எம்.எல்.ஏ., செந்தில்நாதன், வழக்கறிஞர்கள் பாண்டியன், சரவணன், இன்பலாதன், மதிவாணன், ரத்தினாகரன், முன்னாள் எம்.எல்.ஏ., ராஜசேகரன், தலைமை ஆசிரியர் சரவணன் பேசினர்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

