நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புவனம : திருப்புவனம் வேலம்மாள் பள்ளியில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி., மாணவ, மாணவியர் அறிவியல் கண்காட்சி பார்வையாளர்களை கவர்ந்தது.
முதல்வர் ஜாஸ்மின் சாந்தி தொடங்கி வைத்தார். நிர்வாக தலைவர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். மாணவ, மாணவியர் குழுவாக இணைந்து தங்களது அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர். கலப்பட பொருள் கண்டறிதல், எண்களை ஓவியமாக மாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள், அறிவியல் கண்டுபிடிப்புகளை காட்சிபடுத்தியிருந்தனர்.

