/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிறுதானிய மதிப்பு கூட்டல் பயிற்சி
/
சிறுதானிய மதிப்பு கூட்டல் பயிற்சி
ADDED : ஜன 14, 2024 04:47 AM
திருப்புத்துார், : திருப்புத்துார் வட்டாரத்தில் வேளாண் துறை சார்பில் அட்மா -விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு சிறுதானிய மதிப்பு கூட்டுதல் பயிற்சி அளிக்கப்பட்டது.
வேளாண்மை துறையில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா)- விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் மூலம் தமிழகத்திலும், வெளி மாநிலங்களிலும் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
மேலும் கண்டுணர்வு சுற்றுலா, பண்ணைப்பள்ளி, செயல் விளக்கங்கள் மூலம் தொழில்நுட்ப செய்திகள் வழங்கப்டுகிறது.
திருப்புத்துார் வட்டார விவசாயிகளுக்கு சிறுதானியங்களில் மதிப்பு கூட்டுதல் குறித்து மதுரை வேளாண் கல்லுாரியில் பயிற்சி அளிக்கப்பட்டது.
ஏற்பாட்டினை திருப்புத்துார் வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுதர்சன், உதவி தொழில்நுட்ப மேலாளர் சண்முகப்பாண்டி செய்தனர்.

