/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தென் மண்டல பல்கலை பெண்கள் கிரிக்கெட் போட்டி
/
தென் மண்டல பல்கலை பெண்கள் கிரிக்கெட் போட்டி
ADDED : ஜன 19, 2024 04:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடி அழகப்பா பல்கலை., உடற்கல்வியியல் கல்லுாரியில் நடந்த தென் மண்டல பல்கலை., இடையேயான பெண்கள் கிரிக்கெட் போட்டியை அமைச்சர் மெய்ய நாதன் தொடங்கி வைத்தார்.
ஜன.22 வரை 5 நாட்கள் நடைபெறும் இப்போட்டியின் தொடக்க விழா நேற்று நடந்தது.
அழகப்பா பல்கலை., பதிவாளர் செந்தில்ராஜன் வரவேற்றார். அழகப்பா பல்கலை துணை வேந்தர் க. ரவி தலைமையேற்று பேசினார்.
சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் போட்டியை தொடங்கி வைத்து பேசினார்.
மாங்குடி எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் தென்னவன் கோட்டாட்சியர் பால்ராஜ் தாசில்தார் தங்கமணி, கோட்டையூர் சேர்மன் கார்த்திக் சோலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

