/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தென் மண்டல பல்கலை பெண்கள் கிரிக்கெட்
/
தென் மண்டல பல்கலை பெண்கள் கிரிக்கெட்
ADDED : ஜன 23, 2024 04:31 AM

காரைக்குடி: காரைக்குடி அழகப்பா பல்கலை., உடற்கல்வியியல் கல்லுாரியில் இந்திய பல்கலை கூட்டமைப்பின் சார்பில் தென்மண்டல பல்கலை. இடையேயான போட்டி நடந்தது.
இதில், 23 அணிகள் விளையாடின. இறுதிப் போட்டியில் கோட்டயம்மகாத்மா காந்தி பல்கலை.,முதலிடத்தையும், கோழிக்கோடு பல்கலை. இரண்டாமிடத்தையும், மைசூர் பல்கலை., மூன்றாமிடத்தையும் கண்ணுார்பல்கலை., நான்காமிடத்தையும் பிடித்தன.
வெற்றி பெற்ற இந்த நான்கு அணியும் அகில இந்திய அளவில் நடைபெறும் பெண்கள் கிரிக்கெட் போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளனர்.
நிறைவு விழா நேற்று நடந்தது. அழகப்பா பல்கலை., துணைவேந்தர் க.ரவி தலைமையேற்று பேசினார். இந்திய பல்கலை கூட்டமைப்பின் பார்வையாளர் செல்வகுமார், அழகப்பா பல்கலை., ஆட்சிப் பேரவை குழு உறுப்பினர் எஸ் முருகேசன் பேசினர்.
அழகப்பா பல்கலை உடற்கல்வி இயக்குனர் செந்தில்குமரன், அழகப்பா உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் முரளிராஜன் யோகா மைய ஒருங்கிணைப்பாளர் சரோஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செந்தில் ராஜன் வரவேற்றார். நாகராஜன் நன்றி கூறினார்.

