/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ராமர் கோயில்களில் சிறப்பு வழிபாடு
/
ராமர் கோயில்களில் சிறப்பு வழிபாடு
ADDED : ஜன 23, 2024 04:33 AM

சிவகங்கை: சிவகங்கை நகர் பா.ஜ., சார்பில் திருப்புத்துார் ரோட்டில் உள்ள ராமர் மடத்தில் ராமர் சிலைக்கு பூஜை செய்து வழிபட்டனர். நகர் தலைவர் உதயா தலைமை வகித்தார்.
மாநில ஓ.பி.சி., அணி துணைத் தலைவர் ராஜேந்திரன், தொழில் பிரிவு மாவட்ட தலைவர் கருப்பையா, மகளிர் அணி மாவட்ட பொருளாளர் ேஹமமாலினி, நகர பொது செயலாளர்கள் பாலா, சதீஸ் கலந்துகொண்டனர்.
மானாமதுரை
மானாமதுரையில் ஆஞ்சநேயர் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
ராமாயண காலத்தில் ராமர் இலங்கை சென்று போரிட வானர படைகளை அனுமன் தலைமையில் தயார் செய்து அனுப்பிய போது மானாமதுரை பிருந்தாவன காட்டிற்கு வந்த வானர படைகள் அங்கு உள்ள பழங்கள் மற்றும் இயற்கை உணவுகளை உண்டு மயங்கின.
இலங்கை சென்று போரிடுவதை மறந்து காட்டில் மயங்கியிருந்த போது அங்கு வந்த ராமர், வானர படைகளுக்கு எதற்காக நாம் வந்தோமோ அதை மறக்க கூடாது,செய்கின்ற பணிகளை கவனமுடன் பல கஷ்டங்கள் வந்தாலும்கடமையை முடித்து காட்ட வேண்டும் என உபதேசம் செய்தார்.
ராமரின் உபதேசத்தை வானர படைகள் தலை வணங்கி ஏற்று கொண்டு ஒற்றுமையுடன் அனுமன் தலைமையில் இலங்கை செல்ல கடலில் பாலம் அமைத்து சென்று போரில் வென்று சீதையை மீட்டு வந்தனர். அதன் நினைவாக மாவலி மன்னர் வீர அழகர் கோவிலை மானாமதுரை வைகை ஆற்றங்கரையில் கட்டி அதில் வீரஆஞ்சநேயருக்கு தனிசன்னதியும் அமைத்தார்.
நேற்று மானாமதுரை ஆஞ்சநேயர் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
மானாமதுரை ஒன்றியத்துக்குட்பட்ட அன்னவாசல், வன்னிக்குடி, சங்கமங்கலம், கஞ்சிமடை, வெள்ளிக்குறிச்சி, வாகுடி, சிறுகுடி, குலையனூர், மூங்கில் ஊரணி வேதியரேந்தல், செங்கோட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள கோயில்களில் ஒன்றிய தலைவர் ரவிச்சந்திரன், மாவட்டத் துணைத் தலைவர் சுரேஷ்,நகரத் தலைவர் நமகோடி, (எ)முனியசாமி, பொதுச் செயலாளர் ராஜா தலைமையில் பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகளை நடத்தி மரக்கன்றுகளை நட்டனர்.
கட்டிக்குளம் சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமி கோயிலில் உள்ள ராமர் சன்னதியில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
சக்தி கேந்திர பொறுப்பாளர் பிரதீபா,ராணுவ பிரிவு ஒன்றிய தலைவர் முருகேசன், அரசு சார்பு ஒன்றிய பிரிவு தலைவர்பாலன்(எ)பாலகிருஷ்ணன், ஊடகப்பிரிவு ஒன்றிய தலைவர் சேது, நிர்வாகிகள் பாலமுருகன், தில்லை, தேன்மொழி, குழந்தைவேல், கல்யாணசுந்தரம், மதி (எ)மதிவாணன் கலந்து கொண்டனர்.
திருப்புத்துார்
திருப்புத்துார் நின்ற நாராயண பெருமாள் கோயிலில்சக்கரத்தாழ்வார் சன்னதி முன்பாக யாகசாலை பூஜை காலையில் துவங்கியது. பூர்ணாகுதி தீபாராதனைக்குப் பின் கலசங்கள்புறப்பாடாகி மூலவர் ராமர்,சீதை,லெட்சுமணன் ஆகியோருக்கு அபிேஷக ஆராதனை நடந்தன.
மேலக்கோட்டை வீர ஆஞ்சநேயர் கோயிலில் யாகசாலை பூஜை நடந்து மூலவருக்கும், உற்ஸவருக்கும் சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தன.
மேலத் திருத்தளிநாதர்கோயில் அருகிலுள்ள ராமர் பஜனை மடத்தில் ராமர், சீதை, அனுமன் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 108 முறை ஸ்ரீ ராமஜெயராம் மந்திரம் சொல்லி பக்தர்களின் பஜனை கீர்த்தனைகள் நடந்தது.
தி.புதுப்பட்டி அகத்தியர் கோயிலில் தமிழில் யாகசாலை பூஜைகள் நடந்தன. ராமர் சீதை ஆஞ்சநேயர் படங்களுக்கு பூஜை செய்யப்பட்டது. மூலவர் ஆஞ்சநேயருக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன.
காரைக்குடி
பா.ஜ., சார்பில் காரைக்குடி கொப்புடைய நாயகியம்மன் கோயில், முத்துமாரியம்மன் கோயில், முத்தாலம்மன் கோயில், கணேசபுரம் மாரியம்மன்கோயில், பஞ்சமுக விநாயகர் கோயில், தர்ம முனிஸ்வரர் கோயில், செஞ்சை முனீஸ்வரர் கோயில் உட்பட பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
பா.ஜ., முன்னாள் தேசிய செயலாளர் எச். ராஜா, மாவட்ட பொதுச் செயலாளர் நாகராஜன் மாவட்டத் துணைத் தலைவர் நாராயணன், நகரத் தலைவர்கள் பாண்டியன், மலைக்குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கானாடுகாத்தான் வெங்கடேச பெருமாள் கோயிலில், ஸ்ரீராம பக்தர்கள், பொதுமக்கள் சார்பில் சிறப்பு பூஜையும், அன்னதான நிகழ்ச்சியும் நடந்தது.
அமராவதிப் புதூர் ஸ்ரீ சாரதா நிகேதன் மகளிர்கல்லூரியில் ஸ்ரீ ராம பஜன் நடந்தது. சாரதேஸ்வரி பிரியா அம்பா, ராமகிருஷ்ண பிரியா அம்பா தலைமையில், முதல்வர் சிவசங்கரி ரம்யா, இயக்குனர் மீனலோச்சனி மற்றும் ஆசிரியர்கள், மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தேவகோட்டை
தேவகோட்டை அருகே பட்டுக்குருக்கள் நகரில் உள்ள பிருத்தியங்கிரா தேவி கோயில் வளாகத்தில் ராமர், சீதை, லட்சுமணன்,ஆஞ்சநேயர், பஞ்சஉலோக விக்ரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, நகர தலைவர் பாலகிருஷ்ணன்,மாவட்ட அரசு தொடர் தலைவர் பழனியப்பன், மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் கோமதி நாச்சியார் மற்றும் பலர் பங்கேற்றனர்.
* சாலைக்கிராமத்தில் வடக்கு ஒன்றிய பா.ஜ., சார்பில் கோயில்களிலும் பொது இடங்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

