/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புத்துார் பள்ளியில்பேச்சுப் போட்டி
/
திருப்புத்துார் பள்ளியில்பேச்சுப் போட்டி
ADDED : ஜன 23, 2024 04:42 AM
திருப்புத்துார்: திருப்புத்துார் கிறிஸ்துராஜா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் குடியரசு தினத்தை முன்னிட்டு ராமாயணம், மகாபாரதம் குறித்து பேச்சுப்போட்டியில் பங்கேற்க ஜன. 24க்குள் பதிவு செய்ய அறிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்துராஜா திருவள்ளூவர் பேரவை மற்றும் லியோ சங்கம் சார்பில் ஜன.30ல் பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளது. ராமாயணக் காப்பியத்தில் பெரிதும் விரும்பும் கதாபாத்திரம்அல்லது மகாபாரதம் காப்பியத்தில் விரும்பும் கதாபாத்திரம் குறித்து பேச்சுப்போட்டி நடைபெறும்.
ஒவ்வொருவரும் 5 நிமிடங்கள் பேசலாம். திருப்புத்துார் பகுதி தனியார், அரசு பள்ளி 7, 8, 9ம் வகுப்பு மாணவர்கள் மட்டும் பங்கேற்கலாம்.
பெயர்கள் பதிவு செய்ய: 94439 77232ல் வாட்ஸ் ஆப் செய்யலாம். என்று பள்ளி செயலர் ரூபன் அறிவித்துள்ளார்.

