/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மழை இன்றி சுரங்கப்பாதையில்தேங்கிய கழிவு நீரால் அவதி
/
மழை இன்றி சுரங்கப்பாதையில்தேங்கிய கழிவு நீரால் அவதி
மழை இன்றி சுரங்கப்பாதையில்தேங்கிய கழிவு நீரால் அவதி
மழை இன்றி சுரங்கப்பாதையில்தேங்கிய கழிவு நீரால் அவதி
ADDED : ஜன 23, 2024 04:38 AM

சிவகங்கை: சிவகங்கை ரயில்வே சுரங்க பாதையில் மழை இன்றி பல மாதங்களாக கழிவு நீர்தேங்கி துர்நாற்றம் வீசுவதால் நோய் பரவும் அச்சம் நிலவுகிறது.
மதுரை - தொண்டி தேசிய நெடுஞ்சாலை அறிவிப்பிற்கு பின், ரயில்வே கேட்டை அகற்றி, 2010ல் ரயில்வே மேம்பாலம் கட்டினர். மேம்பாலம் வழியாக செல்ல முடியாத வாகனங்கள், 48 காலனி, ஆயுதப்படை பிரிவு போலீசார்,கேந்திரிய வித்யாலயா உள்ளிட்ட பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கென பாலத்திற்கு கீழே சுரங்கப்பாதை அமைத்தனர்.
சுரங்கப்பாதை அமைக்கும் போதே, மழை நீர் உள்ளே செல்லாத அளவிற்கு கட்டுமான பணிகளை மேற்கொள்ள வில்லை. இதனால், சிறு மழைக்கு கூட ரயில்வே சுரங்கப்பாதையில் கழிவு நீர் தேங்கி கிடந்தது.
இந்த வழியாக வாகனங்களில் செல்லும் மாணவர்கள், பொதுமக்கள்பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். பொதுவாக மழைக்காலத்தில் தான் சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்கி நிற்கும் என எண்ணி வாகனங்கள் மேம்பாலம் வழியாக செல்லும்.
ஆனால், கடந்த சில மாதங்களாக மழையே பெய்யாமல், சுரங்கப்பாதை கட்டங்கள் சேதமுற்று, சிதைந்த கட்டடங்கள் வழியே கழிவு நீர் சேகரமாகிறது. இதனால், எந்த நேரமும் சுரங்கப்பாதையில் கழிவு நீர் குளம் போல் தேங்கி கிடக்கின்றன. இதனை அப்புறப்படுத்த வேண்டிய ரயில்வே, நகராட்சி உள்ளிட்டதுறையினர் யாரும் இதை கண்டு கொள்வதே இல்லை.
சுரங்கப்பாதையில் கசிந்து வரும் கழிவுநீரை அடைக்கவும், தொடர்ந்து மழை நீர் தேங்காத வகையில் பிற மாவட்ட சுரங்கப்பாதை போன்றே கூரை அமைக்க ரயில்வே நிர்வாகம் முன்வரவேண்டும் என சிவகங்கை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

